ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » குளோரின் கலக்காத குடிநீர் கொண்டு சென்ற 3 தனியார் தண்ணீர் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர்.

Image result for water lorry
குளோரின் கலக்காத குடிநீர் கொண்டு சென்ற 3 தனியார் தண்ணீர் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு ஓழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடு வீடாக சென்று புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கமிஷனர்  உத்தரவின் பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் உள் பகுதிகள், வார்டுகள், குறிப்பாக டெங்கு சிறப்பு வார்டுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் நேற்று புகை மருந்து அடிக்கப்பட்டது. இப்பணிகளை உறைவிட மருத்துவ அதிகாரி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி 3 மைல் பகுதியில் ஊருக்கு வெளியே இருந்து தூத்துக்குடிக்கு லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. 

இதுபோன்று குடிநீர் கொண்டு வரப்படும் தனியார் லாரிகளை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவற்றில் 3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட லாரிகளில் உள்ள குடிநீரில் குளோரின் கலக்காமல் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த லாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

0 comments

Leave a Reply