ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » உலக அஞ்சல் தின விழா

Image result for உலக அஞ்சல் தின விழா
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலக அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது உறவினர்களுக்கு தலைக்கவசம் அணிந்து செல்லவும், சாலையின் இடதுபக்கம் செல்லவும், சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தி கடிதம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டனர்.
பின், செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால்தலை சேமிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு போன்றவற்றை கடிதம் மூலம் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர்.
கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் போக்குவரத்துப் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் கண்ணபிரான் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க போக்குவரத்து பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வம், பாரதியார் நினைவு அறக்கட்டளைத் தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0 comments

Leave a Reply