ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » தமிழகத்திற்கு மழைக்கு இன்று வாய்ப்புள்ளது

Image result for தமிழகத்திற்கு மழைக்கு இன்று வாய்ப்புள்ளது
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகம் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் உள் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 
நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதேபோல் நாளை உள் தமிழகத்திலும், தென் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

0 comments

Leave a Reply