ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் » புனித ராஜகன்னிமாதா ஆலய திருவிழா தேர் பவனி

புன்னக்காயலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர் பவனியில் திரளான ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயலில் புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமை வகித்தார். திவ்யநற்கருணை ஆசீர் ஆராதனை நிகழ்ச்சிகளில் சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை சில்வஸ்டர் அடிகளார், அருள்தந்தை பிரதீபன் அடிகளார் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், சனிக்கிழமையும் உறுதிபூசுதலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அன்னையின் திருஉருவத்தேர் பவனி நடைபெற்றது. பின்னர் மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. மாலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா ஆராதனையும், இரவில் புனிதரின் சப்பர பவனியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
10ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலியும், சப்பர பவனியும், மாலையில் கொடியிறக்கமும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை புன்னக்காயல் பங்குத்தந்தை கிஷோக் அடிகளார், துணைத்தந்தை சந்தியாகு அடிகளார், அருள்சகோதரிகள், ஊர்நலக்கமிட்டியினர், துறைமுகசபைக்கமிட்டியினர், கோயில் கமிட்டியினர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply