ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » உலக மனநல நாளை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Image result for உலக மனநல நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் உலக மனநல நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பட்டி ஆர்டிஓ. அலுவலகம் முன்பு நடந்த உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணியின் தொடக்க விழாவிற்கு டி.எஸ்.பி. முருகவேல் தலைமை வகித்தார். ஆக்டிவ் மைன்ஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா வரவேற்றார். மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் விஜயன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முககனி, பொருளாளர் முகேஷ்ஜெயின், மகளிர் மன்ற செயலாளர் மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். 

பேரணியை ஆர்.டி.ஓ. கண்ணபிரான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி எட்டயபுரம்ரோடு, அரசு மருத்துவமனைரோடு, தாலுகா அலுவலகம் வழியாக டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. பேரணியின் போது வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

இசையாசிரியை அமலபுஷ்பம், ஆசிரியர் ரூத்ரத்தினகுமாரி, என்.எஸ்.எஸ். அலுவலர் தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஐயப்பசாமி, ராமசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொறுப்பாளர் சேர்மராஜன் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply