ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » புன்னைக்காயலில் புனித ராஜகன்னிமாதா ஆலயத்திருவிழா நடந்து வருகிறது

புன்னைக்காயலில் புனித ராஜகன்னிமாதா ஆலயத்திருவிழா நடந்து வருகிறது. புன்னைக்காயல் புனித ராஜகன்னிமாதா ஆலயத்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்திற்கு அமலிநகர் பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமை வகித்தார். திவ்ய நற்கருணை ஆசீர் ஆராதனை நிகழச்சிகளில் சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை சில்வஸ்டர், பங்குத்தந்தை பிரதீபன் ஆகியோர் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடக்கிறது. அக்.7ம் தேதி காலையில் புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், 8ம் தேதி உறுதி பூசுதலும் நடக்கிறது. 
    பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை வகிக்கிறார். திருவிழா தினமான 9ம் தேதி காலையில் அன்னையின் திரு உருவத் தேர்ப்பவனியும் நடக்கிறது. பின்னர் மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் தலைமையில் திருவிழா கூட்டுத்திருபலியும், மாலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா ஆராதனையும், இரவில் புனிதரின் சப்பரப்பவனியும் நடக்கிறது. 
10ம் தேதி காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலியும், சப்பரபவனியும், மாலையில் கொடியிறக்கமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை புன்னைக்காயல் பங்குத்தந்தை கிஷோக், துணைத்தந்தை சந்தியாகு, கன்னியாஸ்திரிகள், ஊர்நலக் கமிட்டியினர், துறைமுக சபைக்கமிட்டியினர், கோயில் கமிட்டியினர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் செய்துள்ளனர். திருவிழாவின் போது ஏராளமான பிற சமுதாய மக்களும் கலந்து அன்னையை வழிபட்டு வருகின்றனர். 
Tags: arumuganeri

0 comments

Leave a Reply