ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » புகையிலை விழிப்புணர்வுப் பேரணி

Image result for புகையிலை விழிப்புணர்வுப் பேரணி
தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு (தூத்துக்குடி 3) சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து தொடங்கிய பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் வின்சென்ட் அமல்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இப்பேரணி  கடற்கரை சாலை, வி.இ.சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.  பேரணியில், தேசிய மாணவர் படையின் தரைப்படை, கப்பற்படை பிரிவினர், தரைப்படை அதிகாரி சிலுவை, மேஜர் குர்தியால்சிங், கடற்படை பிரிவு அதிகாரி கில்பர்ட், பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

0 comments

Leave a Reply