ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » மாநில அளவிலான நீச்சல் போட்டி: எஸ்.டி.ஆர். பள்ளி சிறப்பிடம்

Image result for நீச்சல் போட்டி
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தூத்துக்குடி எஸ்.டி.ஆர். பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
மாநில அக்குவாட்டிக் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கோரம்பள்ளம் எஸ்.டி.ஆர். பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், 14 தங்கப் பதக்கம், 13 வெள்ளிப் பதக்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை பெற்று இப்பள்ளி மாணவர், மாணவிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை பள்ளிநிர்வாகி எஸ்.டி.ஆர். விஜயசீலன், தாளாளர் எஸ்.டி. பொன்சீலன் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

0 comments

Leave a Reply