ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » கோவில்பட்டி வேட்பு மனு தாக்கல்

கோவில்பட்டி நகராட்சி 36 வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 149 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரையில் கோவில்பட்டி நகராட்சி 36 வார்டுகளுக்கு மொத்தம் 234 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. 

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று கோவில்பட்டி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் 8 பேரும், அதிமுகவில் 45 பேரும், தேமுதிகவில் 10 பேரும், நாம் தமிழர் கட்சியில் 4 பேரும், பா.ஜவில் 2 பேரும், மதிமுகவில் 11 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸில் 9 பேரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் 2 பேரும், காங்கிரசில் 5 பேரும், பா.ம.க.வில் 2 பேரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 2 பேரும், சுயேட்சை வேட்பாளர்களாக 48 பேரும் என மொத்தம் 149 பேர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  இந்நிலையில் வேட்புமனு தாக்கல் துவங்கிய கடந்த 26ம் தேதி முதல் கடைசி நாளான நேற்று வரை கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 234 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட 19 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளுக்கு கடைசி நாளான நேற்று திமுகவில் 8, அதிமுகவில் 38, பா.ம.க.2, பா.ஜ.க.3, புதிய தமிழகம் கட்சி 2, மதிமுக 5, தேமுதிக 5, சுயேட்சை 20 என மொத்தம் 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் 13வது மற்றும் 14வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று மதிமுகவில் 2 பேரும், தேமுதிகவில் ஒருவரும், பா.ம.கவில் ஒருவரும், பா.ஜ.வில் ஒருவரும், புதிய தமிழகம் கட்சியில் ஒருவரும், சுயேட்சை வேட்பாளராக ஒருவரும் என மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரையில் இந்த 2 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளுக்கும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கோவில்பட்டி யூனியனுக்கு 38 பஞ்சாயத்துக்களுக்கு கடைசி நாளான நேற்று 94 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரையில் 242 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 38 பஞ்சாயத்துக்களில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்கு இதுவரையில் மொத்தம் 797 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

0 comments

Leave a Reply