ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா


Image result for குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா
Image result for குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழா இன்று(அக்.,10 ) நள்ளிரவு12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் மாறு வேடங்களுடன் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா தமிழகத்தில் குலசேகரப்பட்டிணத்தில் நடக்கும். இங்கு நடக்கும் தசரா திருவிழாவிற்கு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
முத்தாரம்மன்: வெம்மை நோயால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆறவைப்பதால்
முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். முத்துக்களை ஆரமாக அணிந்ததாலும் முத்தாரம்மன் எனப்பெயர் பெற்றார். முத்தாரம்மன், ஞானமுத்தீஸ்வரர் சமேதராக
காட்சியளிப்பதால், அம்மையும், அப்பனும் வீற்றிருக்கும் காட்சி காண இயலாத
அற்புத காட்சியாகும்.
அக்., 1 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதில் பக்தர்கள் பங்கேற்று காப்பு கட்டிக்கொண்டு அம்மனுக்கு விரதம் இருந்து வருகின்றனர்.திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். பல்வேறு திருக்கோலத்தில், பல்வேறு வாகனங்கிளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
தசரா செட்டுகள்: தசரா திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் பக்தர்கள் காப்பு கட்டி வீட்டை
விட்டு வெளியே வந்து கூரை ஷெட்டுகள் அமைத்து தங்குவார்கள். தினமும் ஒரு வேளை
பச்சரிசி சாதமும், துவையலும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். திருவிழா நாட்களில்
தினமும் தசரா செட்டுகள் மாறு வேடங்கள் பூண்டு தெருத்தெருவாக காணிக்கை
சேகரிப்பார்கள். காளி , அம்மன், அனுமன், கிருஷ்ணன், நாரதர்,விநாயகர்,குறவன், குறத்தி வேடமணிந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இவர்கள் நேற்று முதல் கோவில் வளாக பகுதியில் குவிந்து வருகின்றனர்.
10 ம் நாள் விழா : திருவிழாவில் முக்கிய இன்று அக்., 10 ல் காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடக்கும்.
இரவு 7 மணிக்கு அம்மன் கடற்கரை வளாகத்திற்கு சிம்மவாகனத்தில் எழுந்தருளுவார்.
இரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை
வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
11 ம் நாள்விழா: அதிகாலை ஒரு மணிக்கு கடற்கரையில் உள்ள மேடையில் அம்மன் எழுந்தருளி
சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர்
கோயிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு பின் திருத்தேரில் அம்மன் வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார்.
மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12 ம் நாள்: காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,ஆராதனைகள் நடக்கிறது.
மதியம் 12 ம் மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும், கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் சமய சொற்பொழிவு, கலை நிகழச்சிகள் நடக்கிறது.
சிறப்பு ஏற்பாடுகள்: தசரா திருவிழாற்கு பக்தர்கள் வருகை தருவதற்கான அனைத்து பகுதியில் இருந்தும் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் ஊருக்கு வெளியில் தற்காலிக மைதானங்கள்
அமைக்கப்பட்டு நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சி.லட்சுமணன், உதவி கமிஷனர் அன்னக்கொடி. நிர்வாக அதிகாரி இராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

0 comments

Leave a Reply