ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஆழ்கடலில் கூட்டு பயிற்சி

Image result for துறைமுகத்திற்கு ஆழ்கடலில் கூட்டு பயிற்சிக்காக
தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஆழ்கடலில் கூட்டு பயிற்சிக்காக இந்திய கப்பல் படை கப்பல் 
"திர்', கடலோர காவல்படைக்கு சொந்தமான வருணா ஆகிய இரு கப்பல்கள் 
நேற்று மாலை வருகை தந்தது. 
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையோரங்களில் தொடர்ந்து பதட்ட நிலை நிலவி 
வருகிறது. தொடர்ந்து பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினர் மீது 
துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இது போன்ற சூழலில் இந்தியாவின் அனைத்து 
பகுதிகளிலும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம், என்பதால் விழிப்புடன் 
இருக்கும்படி பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதனை தொடர்ந்து தென் பிராந்தியத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து இந்தி கப்பல் 
படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., "திர்' என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வருகை தந்துள்ளது. இதில் கமாண்டன்ட் ரேவ் என்பவர் தலைமையில் 20 அதிகாரிகளும், 180 கப்பல்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். 
கடலோர காவல்படைக்கு சொந்தமான வருணா என்ற கப்பல் கமாண்டன்ட் ராஜேஸ் மித்தல் 
தலைமையில் 75 வீரர்களும், 15அதிகாரிகளும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று மாலை 
5.30 மணிக்கு வருகை தந்துள்ளார்கள்.
இந்த இரு கப்பலில் உள்ள வீரர்களுக்கும் திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி பகுதியில் 
உள்ள ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் கப்பல்படை தளத்தில் இருந்து, ஆழ்கடலில் ஒரு நாள் 
கூட்டு பயிற்சிவழங்கப்படவுள்ளது. பயிற்சி முடிந்த பின் இன்று (அக்., 6)மாலை கப்பல்கள் 
புறப்பட்டு செல்லும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

0 comments

Leave a Reply