ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் இளம் விஞ்ஞானிக்கு பாராட்டு

Image result for ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் கோவில்பட்டி இளம் விஞ்ஞானிக்கு பாராட்டு
ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசூர்யாவிற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.  ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடந்த இளம் விஞ்ஞானி தேர்விற்கான போட்டியில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சிவசூர்யாவின், சூரிய ஒளியில் பேட்டரியில் இயங்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய டிராக்டர் வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவிற்கான இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. 

இதையடுத்து இளம் விஞ்ஞானி விருது பெற்ற சிவசூர்யா ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 9 நாட்கள் பயிற்சி பெற உள்ளார். இந்நிலையில் ரஷ்யாவிற்கு பயிற்சி பெற செல்லும் மாணவர் சிவசூர்யாவை அவரது இல்லத்தில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சங்க தலைவர் லட்சுமணபெருமாள் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ரோட்டரி சங்க சாலை பாதுகாப்பு மாவட்ட தலைவர் முத்துசெல்வம், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், வேளாண்மைத்துறை கண்காணிப்பாளர் நடராஜன், தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் சாரதி சுப்புராஜ் ஆகியோர் மாணவர் சிவசூர்யாவை பாராட்டினர்.

0 comments

Leave a Reply