ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» குலசேகரன்பட்டினம் » குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

Image result for குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா
Image result for குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2ம் நாளான நேற்று முன்தினம் கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரராக அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 2ம் நாளான நேற்று முன்தினம் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. மாலை 4 முதல் 6 மணி வரை சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், இரவு 9மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, இரவு 11 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதன்காரணமாக உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply