ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » கிருஷ்ணன் கோயிலில் கருட சேவை

புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனை நடந்தது. 10 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகத்தை தொடர்ந்து 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக கோயிலுக்கு வந்தடைந்தது. யாதவ மகா சபை தலைவர் வேலாயுதம், கலெக்டரின் நேர்முக முன்னாள் உதவியாளர் ராமகிருஷ்ணன், நாராயணன், அர்ச்சனா கிட்டன், சாந்தி பேக்கரி ராதாகிருஷ்ணன், ராஜாமணி, வீரபாகு, நடராஜன், கார்க்கி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிருஷ்ணன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply