ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 17ம் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இதற்காக புதிய இரு டோல் பிரி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 18004256901, 18004256902 ஆகிய இரு எண்களிலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் புகார்களையும் தெரிவிக்கலாம். இத்தகவலை கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a Reply