ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் களையிழந்து காணப்படும் நுழைவாயில்

Image result for திருச்செந்தூரில்  நுழைவாயில்
திருச்செந்தூரில் பெயின்ட் உதிர்ந்து களையிழந்து காணப்படும் நுழைவாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு புதிதாக வர்ணம் தீட்ட வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இங்கு ஆங்கில வருட பிறப்பு, தைப்பொங்கல், மாசித்திருவிழா, தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாக திருவிழா, ஆவணித்திருவிழா, கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட பல திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் முக்கிய விழாக்களுக்கு சாமி தரிசனம் செய்ய நெல்லை, பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், பாளை, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளான முருக பக்தர்கள் அலகுகுத்தி, காவடி, பால்குடம் எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாளையங்கோட்டை பிரதான சாலையில் 2 கிமீ தூரத்தில் கோபுர தரிசனம் செய்யும் இடம் உள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் கோபுர தரிசனம் செய்யும் இடத்திற்கு வந்ததும் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் அங்கு சூடமேற்றி சாமி கும்பிட்டு விட்டு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நுழை வாயில் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்தவித பராமரிப்பு பணிகளும் நுழை வாயிலில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்போது நுழை வாயில் களையிழந்து காணப்படுகிறது. எனவே, திருச்செந்தூர் நுழைவாயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு புதிதாக வர்ணம் தீட்ட வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply