ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » 5 சதவீத உப்பு தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது

Image result for 5 சதவீத உப்பு தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது
Image result for 5 சதவீத உப்பு தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது
‛‛தூத்துக்குடி மாவட்டம் அகில இந்திய உப்பு உற்பத்தியில் 5 சதவீதமும் சென்னை மண்டலத்தில்
62 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது'' என, உப்புத்துறை துணை கமிஷனர் ஹேமந்த்குமார்சர்மா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அகில இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் உப்பு உற்பத்தி குறித்த 2 வது மாநாடு
நடந்தது. 
மாநாட்டில் கலந்து கொண்ட ஹேமந்த்குமார் சர்மா பேசியதாவது: உப்பு உற்பத்தியில் உலக அளவில் சீனா
முதலிடத்திலும், அமெரிக்கா 2 ம் இடத்திலும், இநு்தியா 3 வது இடத்திலும் உள்ளது. சீனா முதலிடம் வகித்தாலும்
இந்தியாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் உப்பு உற்பத்தி ஆண்டுக்கு 2.40 கோடி டன் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த
ஆண்டு 2.76 கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 52 மாவட்டங்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து665 ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு இங்கு 2.18 கோடி டன் உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. இங்கு 21.58 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மூன்றாம் இடம் பெறுகிறது. கடந்த ஆண்டு 19.82 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14.79 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய
அளவில் 5 சதவீதமும், சென்னை மண்டலத்தில் 62 சதவீதமும் ஆகும்.
இந்தியாவில் உப்பு தொழிலில் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 23,901 பேரும்,தூத்துக்குடியில்13 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு 1.19 கோடி டன் உப்பு தொழிற்சாலைகளுக்குசப்ளை செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 9.51 லட்சம் டன்னும், தூத்துக்குடியில் 5.53 லட்சம் டன் பங்களிப்புசெய்துள்ளது.அயோடின் உப்பு கடந்த ஆண்டு இந்தியாவில் 64.76 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இதில்தமிழகத்தில் 6.95 லட்சம் டன்னும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5.89 லட்சம் டன் பங்களிப்பு செய்துள்ளது.
இந்திய அளவில் உப்பு ஏற்றுமதி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மட்டும்
உப்பு உற்பத்தி ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு 789.45 கோடி ரூபாய்
மதிப்புள்ள 65.67 லட்சம் டன் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 2014 ல் உப்பு ஏற்றுமதி
31.41 கோடி ரூபாய் மதிப்பிலான 1.35 லட்சம் டன் ஆக இருந்தது. 2015 ல் 21.34 கோடி ரூபாய் மதிப்பில்
71 ஆயிரம் டன்னாக குறைந்தது. 2016 ல் 16.58 கோடி ரூபாய் மதிப்பிலான 36 ஆயிரம் டன்னாக
குறைந்துள்ளது. இதற்கு காரணம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மத்திய அரசின்
உப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாகவே இந்திய அளவில்
உப்பு உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் உப்பு உற்பத்தியில் 2 ம் இடத்தை
விரைவில் எட்டும் என, அவர் பேசினார். இந்த மாநாட்டில் தலைவர் மைக்கேல் மோத்தா, தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தி கண்காணிப்பாளர்
ஆர்.கஸ்தூரி உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments

Leave a Reply