ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் 5492 பேர் உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரையில் 5492  பேர் உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி ஆகியவற்றின் கவுன்சிலர்கள் மற்றும் வார்டு மெம்பர்கள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ம் தேதி துவங்கியது.  இந்நிலையில் நேற்று வரையில் 60 மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 214 பேர் மனுதாக்கல் செய்துள்ளார்கள் 

மொத்தமுள்ள 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று மாலை வரையில் 41 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
174 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 234 பேரும், 403 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரையில் 1191 பேரும், 2943 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 3297 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 294 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 400 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 115 பேர்  வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று மாலை வரையில் மாவட்டம் முழுவதும் உள்ள 3945 பதவிகளுக்கு மொத்தம் 5492 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒரே நாளில் 136 பேர் மனு
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு போட்டியாக போட்டி வேட்பாளர்கள் 6 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று திமுக வேட்பாளர்கள் 45 பேரும் மாற்று  வேட்பாளர்களாக 18 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

கம்யூனிஸ்ட் சார்பில் 3 பேர், காங்கிரசார் 4 பேர், மதிமுக மற்றும் தமாகா சார்பில் தலா ஒரு வேட்பாளரும், 25வது வார்டுக்கு அதிமுக மாற்று வேட்பாளர், பாஜக சார்பில் 8 வேட்பாளர்கள், தவிர சுயேச்சைகள் 55 பேர் என நேற்று ஒரே நாளில் 136 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால் மாநகராட்சியில் உள்ளாட்சித்தேர்தல் களை கட்டதுவங்கியுள்ளது.

0 comments

Leave a Reply