ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாளுக்கு ஆண்டாள் மாலை அணிவிப்பு புரட்டாசி 5வது நாள் சனிக்கிழமையன்று நடைபெறுகிறதது.

Image result for வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாளுக்கு ஆண்டாள் மாலை
புரட்டாசி 5வது சனிக்கிழமையன்று வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி 5வது சனிக்கிழமையை முன்னிட்டு (15ம் தேதி) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறப்பு      கோபூஜை, 6 மணிக்கு மூலவர், உற்சவர் திருமஞ்சனம், 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8 மணிக்கு காலை சாந்தி பூஜை, திருவாராதனம், தளிகை மற்றும் சாத்துமுறை கோஷ்டி நடக்கிறது.தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலில் இருந்து சூடி கொடுத்த சுடர் கொடிய ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை ஸ்ரீநிவாசபெருமாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

மதியம் 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ஹரநாம அர்ச்சனை, 6 மணிக்கு கருட சேவையில் பெருமாள் திருவீதி உலாவில் சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. காலை 5 மணியிலிருந்து மாலை 3 மணி வரை ஜலதா கோபாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை கிருஷ்ணகிருபா சத்சங்க குழுவினர் நாராயணியம் பாராயணம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சென்னை ஸ்ரீபாவனி நாட்டியாலாயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கோயில் நிறுவனர் ராஜகோபாலின் பேத்தி சம்ப்பிரிதா பங்கேற்று பரிசு வழங்குகிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னதான பிரசாதம் வழங்கப்படுகிறது. 

ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் அவரது மகன்கள் சிவக்குமார், சரவணன் மற்றும் கோயில் ஊழியர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply