ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னையில் மழை

Image result for சென்னையில் மழை
சின்ன மழை பெய்தாலே, என்ன நடக்குமோ என்று பதறும் நிலைமை, சென்னை
வாசிகளுக்கு. வியர்த்துக் கொட்டினாலும் பரவாயில்லை; மழை கொட்ட வேண்டாம் என்று, மக்களின் மனங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய பெருமை, தமிழக அரசையே சேரும்.
ஓராண்டுக்கு முன், பெருமழையில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னும், எந்த பாடத்தையும்
இந்த அரசு கற்கவில்லை. விளைவு, இப்போதும், சாரல் மழைக்கே நாறிப்போகிறது சென்னை.
மலிவு விலை உணவகம், மருந்தகம், விலையில்லா திட்டங்கள் என பல்லாயிரம் கோடிகளை வாரி இறைக்கும் இந்த அரசு, சென்னையில் மழை பாதிப்புகளைக் குறைக்க எத்தனை கோடிகளைச் செலவிட்டது என்பது, யாருக்கும் தெரியாத ரகசியம். நேற்று முன் தினம் இரவு, ஓரிரு மணி நேரம் அடித்துத் துவைத்த மழையில், கிழிந்து போனது சென்னை பெரு நகரம்.
அரசு நிர்வாகம் நடக்கிறதா
அல்லது நடப்பதைப் போல நடிக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு, எந்த மீட்புப் பணியும், சீரமைப்புப் பணியும் நடப்பதே இல்லை. இதே நிலை தொடர்ந்தால், நவம்பருக்குள் பலர், ஊரைக் காலி செய்ய வேண்டும்; அல்லது சென்னை மக்கள் எல்லாரும் சேர்ந்து, ஊருக்கு வெளியே மழை பெய்ய வேண்டி, 'ரெயின் ரெயின் கோ அவே' பாட வேண்டும்.

0 comments

Leave a Reply