ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் பாஜ மறியல் முயற்சி

கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த வாரம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் பாஜ சார்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பாலவிநாயகர் கோவில் தெருவில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 64 பேர் வந்தனர்
  இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகர் சந்திப்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வ சுந்தர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

0 comments

Leave a Reply