ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் திடீர் தர்ணா

குரோம்பேட்டை, நியூ காலனியை சேர்ந்தவர் காமராஜ். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகனின் மைத்துனர். இவர், பல்லாவரம் நகராட்சி, வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க  விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இதுவரை பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.  
இந்நிலையில் நேற்று பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டு, அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது, நகராட்சி தேர்தல் அலுவலர் சிவகுமார், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றார். 

இதையடுத்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாம்பரம் உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றார்கள்

0 comments

Leave a Reply