ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் » மாநில யோகா போட்டி

Image result for மாநில யோகா போட்டி
ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஏகாத்மா யோக விஷ்வ வித்யாலயா அசோசியேசன் மற்றும் இண்டியன் அசோசியேசன் ஆப் யோகா இணைந்து நடத்திய முதலாவது மாநில அளவிலான யோகா சாம்பியன் போட்டிகள் ஆத்தூரில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஸ்குமார் பரிசு வழங்கினார்.
பள்ளிச் செயலர் ச.ராஜரத்தினம், நிர்வாக அலுவலர் ச.கந்தசாமி, தலைமையாசிரியர் ஜெயகணேசன், உதவித் தலைமையாசிரியர் அ.பி.ரஞ்சித்சிங், ஆங்கிலவழி துணை முதல்வர் ந.பிருந்தா உள்ளிட்டோர் பாராட்டினர்.

0 comments

Leave a Reply