ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பூக்கள் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

Image result for பூக்கள் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.


விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்கள் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூ சந்தைக்கு கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் தினமும் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு கிலோ மல்லிகை ரூ. 150-க்கும், முல்லை ரூ. 140-க்கும் சனிக்கிழமை வரை விற்கப்பட்டன. ஆனால், கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கிலோ மல்லிகை ரூ.500-ஆகவும், முல்லை ரூ. 450-ஆகவும், விலை அதிகரித்து காணப்பட்டது. சில்லறை விற்பனையில் ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்கப்பட்ட ஒரு முழம் மல்லிகை, ஞாயிற்றுக்கிழமை ரூ.50 வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு பூ சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் அருள் விசுவாசம் கூறியதாவது:-
பூக்களின் வரத்து இயல்பான நிலையில்தான் உள்ளது. ஆனால், விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களால் பூக்களுக்கான தேவைப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
மதுரையில் வரத்து குறைவு காரணமாக அங்கு ஒரு கிலோ மல்லிகை ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது. சென்னைக்கு பூக்கள் வரத்து சற்று அதிகமாக உள்ளதால் அவை ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையாகின்றன. விலை உயர்வு மேலும் சில நாள்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பூக்கள் விலை விவரம் (கிலோவில், பழைய விலை அடைப்புக்குறிக்குள்):
மல்லிகை ரூ. 450-500 (150)
முல்லை ரூ. 400-450 (145)
கனகாம்பரம் ரூ.600 (350)
ஜாதிமல்லி ரூ.430 (175)
ரோஜா ரூ. 140 (70)
சாமந்தி ரூ.120 (65)
சம்பங்கி ரூ.200 (100)
அரளி ரூ. 150
கோழிக்கொண்டை ரூ.50 (20)

0 comments

Leave a Reply