ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » புனித அன்னை தெரஸா கெபி திறப்பு

Image result for புனித அன்னை தெரஸா
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் புதியதாக அன்னை தெரஸா கெபி திறக்கப்பட்டது.
ரோம் வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபை சமூக சேவகர் அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கியது. இதையடுத்து, வீரபாண்டியன்பட்டணத்தில் அன்னை தெரஸா கெபி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
அன்னை தெரஸா மனிதநேய இயக்கம் சார்பில் புனித தோமையார் ஆலய வளாகத்தில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அன்னை தெரஸா மனிதநேய இயக்க தலைவர் பெயிட்டஸ் லோபோ முன்னிலை வகித்தார். வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை ஆண்ட்ரூடீரோஸ் தலைமை வகித்து, அன்னை தெரஸாவின் கெபியை திறந்து வைத்தார். தொடர்ந்து, புனித அன்னை தெரஸா குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் அடைக்கலாபுரம் அறநிலையம், துளிர் சிறப்பு பள்ளி, திருச்செந்தூர் அன்பு இல்லம் ஆகியவற்றுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது. அடைக்கலாபுரம் பங்குத்தந்தை இசிதோர், முன்னாள் பங்குத்தந்தைகள், இறைமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply