ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கோவில்பட்டியில் மத்திய நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட முன்னாள் கவர்னர் தூத்துக்குடி ராமசாமி தலைமை வகித்தார். விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி லட்சுமிமில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி லிதியாள், பாறைக்குட்டம் டிஆர்டிஏ ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகத்தாய், எட்டயபுரம் பள்ளி தலைமையாசிரியர் ஆகிய 3 பேருக்கு மத்தியநகர் லயன்ஸ் சங்க தலைவர் வன்னியன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் அந்தோணி முன்னிலை வகித்தனர். அரிமா சீனிவாசகம், பரமசிவம், தொழில் வர்த் தக சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், நவநீதகிருஷ்ணன் பேசினர். முன்னாள் தலைவர் சந்தானம் நன்றி கூறினார்

0 comments

Leave a Reply