ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புகள்- மாவட்ட கலெக்டர் ரவிகுமார்


தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

       தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு குறித்த குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுத்தர வாய்ப்பு உள்ளது. பயிற்சி காலம் சுமார் 10 மாதமாகும். டொமஸ்டிக் எலக்ட்ரீசியன், டர்னிங் மற்றும் ஏ.ஆர்.சி. மற்றும் கியாஸ் வெல்டிங் பிரிவுகளுக்கான பயிற்சி அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

சான்றிதழ் 

இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பஸ் கட்டணமாக தினமும் ரூ.100 வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

8–ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர வரும் போது, அனைத்து அசல் கல்வி ஆணவங்களுடன், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ் நகல், 5 புகைப்படத்துடன் வரவேண்டும். மேலும் தகவலுக்கு 0461 – 2340133 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

0 comments

Leave a Reply