ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்

Image result for விவிலியத் திருவிழா
கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவிலியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, கோவில்பட்டி ஆர்.சி. தொடக்கப் பள்ளி வளாகம் முன்பிருந்து இறைமக்கள் அனைவரும் கையில் பைபிளை ஏந்திக் கொண்டு, பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.
ஆலய வளாகத்தில் பாளை மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் ஆலயக் கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.சி. ஆலய பங்குத்தந்தை பீட்டர், உதவி பங்குத்தந்தை சேவியர் ஆகியோர் இணைந்து, உலக சமாதானம் வேண்டி புறாக்களை பறக்கவிட்டனர்.
பின்னர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின், ஆலய வளாகத்தில் சிறுவர், சிறுமியருக்கு போட்டிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பங்கு பேரவை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், அன்பிய வழிகாட்டிகள், கத்தோலிக்க இளையோர் இயக்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply