ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காததால் தீக்குளிக்க முயன்றனர்

Image result for தூத்துக்குடியில் தீக்குளிக்க முயற்சிதூத்துக்குடியில் அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காத மூவர் கட்சி அலுவலகம் முன்பாக தீக்குளிக்கமுயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடியில் மாநகராட்சி கவுன்சிலராக போட்டியிட விண்ணப்பித்திருந்த, சந்தனம், ரமேஷ், கோகிலா ஆகியோர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட சீட்டையும் கடைசிநேரத்தில் பறித்துக்கொண்டனர்.இதனால் ஆத்திரமடைந்த மூவரும் நேற்று, தூத்துக்குடியில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகம் முன்பாக கூடினர். கட்சிக்காக உழைத்த தங்களுக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்ததை கண்டிக்கிறோம் என கோஷமிட்டபடியே மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இவர்களுடன் கோகிலாவின் கணவர் ஜெயமுருகனும் உடன் வந்திருந்தார். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் கட்சியினர் அவர்களை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 comments

Leave a Reply