ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினம் நகராட்சியில் போட்டியிடும் 6 முஸ்லீம் லீக் வேட்பாளர்

காயல்பட்டினம் நகராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் 6 முஸ்லீம் லீக் வேட்பாளர் பெயர்களை முஸ்லிம் லீக் வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் எம்எல்ஏ காயல்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாநகராட்சியில் 20 மற்றும் 53 வார்டுகளிலும், காயல்பட்டினம் நகராட்சியில் 2, 3, 4, 7, 8 மற்றும் 10 ஆகிய 6 வார்டுகளிலும், தெற்கு ஆத்தூர் ஊராட்சி 6வது வார்டிலும், குரூம்பூர் 4வது வார்டிலும் போட்டியிட முடிவு செய்து 
காயல்பட்டினம் நகராட்சியில் போட்டியிடும் 6 முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் பெயர்களை வெளியிடப்பட்டது. 
வேட்பாளர்கள் பெயர்கள்: சித்தி பவுசியா (2வது வார்டு), கிதுரு பாத்திமா (3வது  வார்டு), முத்து ஹாஜரா (4வது வார்டு), ஜெய்னுல் குத்புத்தீன் (7வது வார்டு), முஹம்மது ஆமினா உம்மா ஆலிமா (8வது வார்டு) மற்றும் வாவு சம்சுதீன் (10வது வார்டு). இவர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுவர் என மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a Reply