ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பணியாற்றி வரும் 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

  நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பணியாற்றி வரும் 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டிஐஜி தினகரன் பிறப்பித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.  நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றி டிஐஜி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

இதில், நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் நெல்லை நகருக்கும், ஸ்ரீவைகுண்டம்
அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் நெல்லை நகர் இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் நெல்லை வணிகவியல் குற்ற புலனாய்வு துறைக்கும், இரணியல் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சைரஸ் நெல்லை மாவட்டம் விகேபுரத்திற்கும், தூத்துக்குடி தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் திலகம் நாங்குநேரிக்கும், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தூத்துக்குடி தென்பாகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஊத்துமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தூத்துக்குடி தெர்மல்நகருக்கும், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுத்தமல்லிக்கும், சிவகிரி இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்வம் களியக்காவிளைக்கும், குளச்சல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜானகி குற்றாலத்திற்கும், அம்பை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நாககுமாரி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். குலசேகரம் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் ஊத்துமலைக்கும், குழித்துறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உமா நெல்லை பொருளாதார குற்றப்பிரிவுக்கும்,  கன்னியாகுமரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் வெஸ்லி ராஜ் நெல்லை ஆயுதப்படைக்கும், நெல்லை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அந்தோணி கன்னியாகுமரி போக்குவரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

 நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் ஜமால் இரனியலுக்கும், கழுகுமலை இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி வடசேரிக்கும், தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு பிரேமா கொல்லங்கோடுக்கும், கோவில்பட்டி மதுவிலக்கு தங்கராஜ் ராஜாக்கள்மங்கலத்திற்கும், கடம்பூர் இன்ஸ்பெக்டர் வனிதாராணி ஆரல்வாய்மொழிக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் நாகர்கோவில் நிலமோசடி தடுப்பு பிரிவிற்கும், கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், குலசேகரன்பட்டினம் மீனாட்சிநாதன் நெல்லை மாவட்டம் அச்சன்புதூருக்கும், ராஜாக்கள்மங்கலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் குலசேகரன்பட்டினத்திற்கும், சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளத்திற்கும், நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0 comments

Leave a Reply