ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » 27இல் செஸ் போட்டி தொடக்கம்

Image result for செஸ் போட்டி தொடக்கம்
தூத்துக்குடியில் ஸ்பிக் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி செப். 27ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்பிக் பல்செயல்பாடு கிளப் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட செஸ் அசோசியேஷன், ஸ்பிக் பல்செயல்பாடு கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 29ஆவது ஆண்டு ஸ்பிக் கோப்பைக்கான, ஓபன் செஸ் போட்டிகள் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறுகிறது. போட்டியானது மெடலிஸ்ட், நான் மெடலிஸ்ட் என்ற இருபிரிவுகளாக நடைபெறுகிறது. இதில், பங்கேற்பவர்கள் மெடலிஸ்ட் பிரிவுக்கு ரூ. 1,500-ம், நான்மெடலிஸ்ட் பிரிவுக்கு ரூ. 300-ம், தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் குழந்தைகள் ரூ. 250-ம் நுழைவுக்கட்டணமாக 23 ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு செயலர் கோபாலகிருஷ்ணன் 98402 04191, பொருளாளர் ரெங்கராஜன் 94429 25131, உறுப்பினர் ஜான்டிமெல் 99942 99107 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply