ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சூப்பர் மார்க்கெட்டில் தீ

Image result for சூப்பர் மார்க்கெட்டில் தீ


சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்த விவரம்:
சோழிங்கநல்லூர் மேடவாக்கம் சாலையில் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. 3 தளங்களைக் கொண்ட இந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த காவலாளி, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை முழுமையாக அணைத்தனர். இந்தத் தீ விபத்தால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பெரும்பாலான பொருள்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை: இதேபோல், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள அம்மன் கோயில் அருகே கார், பேருந்து வாகனங்களின் பழைய உதிரி பாகங்கள் விற்கும் கடை உள்ளது. இந்தக் கடையில் இருந்த சில பொருள்கள் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.15 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
தீயணைப்பு படை வீரர்கள் சுமார் அரைமணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை முழுமையாக அணைத்தனர். இதில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply