ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொலை

Image result for ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொலை


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரைக் குத்திக் கொன்றதாக அவரது மகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகர் பல்லக்கு ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி (64).
இவரது மனைவி எஸ்தர் சுகிர்த ராணி. இத் தம்பதியின் மகன் தீபக் சாம்ராஜ் (21). இவர் சாத்தூர் கல்லூரியில் பி.ஏ.  3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
சின்னச்சாமி தனது மனைவி மற்றும் மகனிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். கடந்த 4 நாள்களுக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் எஸ்தர் சுகிர்தராணி விளாத்திகுளத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.
இதையடுத்து, வீட்டில் இருந்த தந்தைக்கும், மகனுக்கும் இடையே வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தீபக் சாம்ராஜ் மதுபாட்டிலால் தந்தையைக் குத்தினாராம். இதில் சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இது குறித்து தனது தாய்க்கு தீபக் சாம்ராஜ் தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, எஸ்தர் சுகிர்த ராணி அளித்த தகவலின் பேரில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் ஆய்வாளர் (பொ) பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் தீபக் சாம்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply