ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » வீட்டுமனைகளாக மாறும் விவசாய நிலங்கள்

Image result for வீட்டுமனைகளாக மாறும் விவசாய நிலங்கள்
விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் வழக்கில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் பத்திரப் பதிவுத் துறை மூத்த அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களை சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக மாற்றி, அவற்றைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதன் விளைவாக, வசாயம் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், இவற்றில் வீடுகளைக் கட்டவும் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம், வீட்டுமனைகளை உருவாக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன? அந்த நிலங்கள் எந்த முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. ஆகையால், இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள பிரச்னை குறித்து நன்கறிந்தவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு உதவி புரிய வேண்டும்.
எனவே, இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.), பத்திரப் பதிவுத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் இருவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments

Leave a Reply