ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் ஊழியர் குத்திக் கொலை

Image result for தூத்துக்குடியில் ஊழியர் குத்திக் கொலை


தூத்துக்குடியில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஏற்றுமதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மரிய அந்தோணி பிரதீப் (24). இவர், தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். மேலும், மாலத்தீவு செல்லும் தோணியிலும் பணிக்கு சென்று வந்தாராம்.
இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு வீட்டில் இருந்த மரிய அந்தோணி பிரதீப்பிடம் சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது, பிரதீப் கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரதீப் கொலை தொடர்பாக லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த  ஸ்டார்வின் (25), சகாயபுரத்தை சேர்ந்த ஜெபஸ்டியன் (24), ஆரோக்கியராஜ் (24), பிரிட்டோ (23), கிளாட்ஸ்டன் (23), கிளாட்வின் (22), மெக்ஸ்டன் (21) ஆகிய 7 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வஉசி மார்க்கெட் பகுதியில் உள்ள ஹோட்டலில் புதன்கிழமை இரவு சாப்பிடும்போது பிரதீப் தரப்பினருக்கும், ஸ்டார்வின் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதன் காரணமாகவே பிரதீப் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply