ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினம் நகராட்சி ஆணையரைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம்

Image result for காயல்பட்டினம் நகராட்சி ஆணையரைக் கண்டித்து நகர்மன்றத் தலைவர் உள்ளிருப்புப் போராட்டம்


காயல்பட்டினம் நகராட்சி ஆணையரைக் கண்டித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் ஸீ கஸ்டம்ஸ் சாலையை, புதிதாக பேவர் பிளாக் சாலையாக அமைக்க, நகர்மன்றத் தலைவரின் ஆட்சேபத்தையும் மீறி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பின்னர் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க விரைவில் மதிப்பீடு செய்ய ஆணையர் உறுதி அளித்திருந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதையடுத்து நகர்மன்றத் தலைவர், ஆணையர் ம.காந்திராஜனிடம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியும், ஆணையரும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலுவலகத்தைவிட்டு வெளியேறி விட்டனராம்.
இதையடுத்து ஸீ கஸ்டம்ஸ் சாலைக்கான மதிப்பீடு தயார் செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து நகர்மன்றத் தலைவர் அலுவலகத்தில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக  நகர்மன்ற உறுப்பினர்கள் அந்தோணி, ஷம்சுத்தீன் மற்றும் அஜ்வாது ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments

Leave a Reply