ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பந்தய கார் மோதி மென்பொறியாளர் சாவு

அம்பத்தூர் அருகே பந்தய கார் மோதியதில் மென்பொறியாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அம்பத்தூர் புதூர் பானு நகரைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (30). ஒரகடம் எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் அபிலாஷ் (30) . இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளர்களாக
பணியாற்றி வந்தனர். பிரேம் ஆனந்த், அபிலாஷுடன் சேர்ந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில், மணலி - தாம்பரம் உள்வட்ட சாலையில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தார்.
அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே வந்தபோது, மேம்பால சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
மணலி-தாம்பரம் உள்வட்ட மேம்பால சாலையில் விடுமுறை நாள்களில் இரு சக்கர வாகனம், கார் பந்தயம் நடப்பது வழக்கம். சுதந்திர தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற பந்தயத்தில்
மணலியிலிருந்து பந்தயக் கார்கள் தாம்பரத்தை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தன. இதிலொரு கார், சாலையோரம் நின்றிருந்த பிரேம் ஆனந்த், அபிலாஷ் மீது மோதியது. பின்னர், அந்த காரில் வந்தவர்கள்
வேகமாகச் சென்று விட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், அவர்கள் இருவரும் அருகிலிருந்த ஒரு சிலரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பிரேம்ஆனந்த் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.உயிரிழந்த பிரேம் ஆனந்துக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார்.

0 comments

Leave a Reply