ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம்

Image result for அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம்
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் ந.நந்தகுமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் வழக்குரைஞர் பெ.முத்துகுமார் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் எஸ்.பாலா உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார்.
திமுக மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், ஒன்றியச் செயலர் செங்குழி ஏ.பி.ரமேஷ், நகரச் செயலர் பெ.மந்திரமூர்த்தி, தேமுதிக ஒன்றியச் செயலர் எஸ்.ஏ.செந்தில்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன், ஒன்றியச் செயலர் ஆ.சங்கத்தமிழன், சமத்துவமக்கள் கட்சி ஒன்றியச் செயலர் அ.ரவிக்குமார், தொகுதிச்செயலர் ஆர்.செல்வக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் வெ.சங்கரகிருஷ்ணன், சமத்துவ சமுதாய அறக்கட்டளை மா.ஜெயதாஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த எம்.எஸ்.முத்து, மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.கார்த்திக், சிஐடியூ பெ.தமிழ்ச்செல்வன், மாதர் சங்க மாவட்டச் செயலர் பி.பூமயில், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.முருகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் சுரேஷ்பாண்டி நிறைவுரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் ச.கதிர்வேல் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply