ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் அருகே அரசுப்பேருந்து சிறைபிடிப்பு

Image result for அரசுப்பேருந்து சிறைபிடிப்பு
திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதாக கூறி அப்பகுதியில் கருப்புக்கொடி கட்டியும், ஊருக்குள் வந்த அரசுப்பேருந்தை சிறைபிடித்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ளது அடைக்கலாபுரம். இவ்வழியாக திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழித்தடத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   இந்நிலையில், தற்போது பெரும்பாலான பேருந்துகள் அனைத்தும் காயல்பட்டினம் வழியாக இயக்கப்படுகிறதாம். இதனால் தங்கள் பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் அடைக்கலாபுரம் வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனக்கூறி, அடைக்கலாபுரம், பிலோமிநகர் மற்றும் சண்முகபுரம் ஆகிய பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளில் திங்கள்கிழமை காலையில் கருப்புக்கொடி கட்டி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்நிலையில் அன்று காலை அடைக்கலாபுரத்துக்கு வந்த அரசுப்பேருந்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன், வட்டாட்சியர் து.செந்தூர்ராஜன், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் பெரி.லட்சுமணன், துணை வட்டாட்சியர் ஞா.கோமதிசங்கர், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதில் ஒரு மாத காலத்திற்குள் அடைக்கலாபுரம் வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அரசுப் பேருந்தை விடுவித்தனர்.

0 comments

Leave a Reply