ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » எம்.எல்.ஏ. ஆய்வு

Image result for திருச்செந்தூர் எம்.எல்.ஏ.


திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு அரசு உயர்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.  ஆய்வின் போது, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலர் செங்குழி ஏ.பி.ரமேஷ், துணைச் செயலர் அமிர்தலிங்கம், பள்ளிப்பத்து ஊராட்சித் தலைவர் ரவி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலர் இளங்கோ, வழக்குரைஞர் கிருபா, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவி பேச்சியம்மாள், ஊராட்சி செயலர்கள் தர்மராஜ், ராஜேஸ்வரன், ஊர் தலைவர் முருகேசன், ஆதிதிராவிட நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் பிச்சமணி, மாவட்ட பிரதிநிதி தங்கதுரை, செல்வகுமார், சித்திரைராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply