ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்

Image result for மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்


திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகைக்கான மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான தகுதி 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ. தியாகராஜன் தலைமை வகித்தார். முகாமில் திருச்செந்தூர் வட்டத்துக்குள்பட்ட தகுதியானவர்களிடமிருந்து 219 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 115 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கையாக, உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை வட்டாட்சியர் து. செந்தூர்ராஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அழகம்மை, கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜீவ் தாகூர் ஜேக்கப், மண்டல துணை வட்டாட்சியர் இரா. ரகு, தேர்தல் துணை வட்டாட்சியர் ஞா. கோமதிநாயகம், திருச்செந்தூர் ஆர்.ஐ. செந்தில்முருகன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply