ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » இளைஞர் வெட்டிக் கொலை

Image result for இளைஞர் வெட்டிக் கொலை


தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த மணி மகன் சரவணன் (29). ஒரு வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட இவர், சில நாள்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.  இந்நிலையில், மில்லர்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பு அருகே, புதன்கிழமை நள்ளிரவு சரவணனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனராம். இது தொடர்பாக தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சரவணன் மீது கொலை முயற்சி, அடிதடி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்பட 17 வழக்குகள் உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply