ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினம் ஜாவியாவில் கந்தூரி விழாImage result for காயல்பட்டினம் ஜாவியாவில் கந்தூரி விழா
காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 152ஆம் ஆண்டு நினைவு நாள் கந்தூரி விழா நடைபெற்றது.
இதையொட்டி, ஆக. 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை 7 நாள்களும் தினசரி இரவு பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம் பெற்றன. 25ஆம் தேதி கந்தூரி நாளன்று காலை 9 மணிக்கு திக்ர் ஹல்காவும், தொடர்ந்து யவ்முல் இல்ம் - கல்வி நாள் நிகழ்ச்சியும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையிலும், எஸ்.எம்.எம். அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ கலீஃபத்துல் குலஃபாயிஷ் ஷாதுலீ முன்னிலையிலும் நடைபெற்றது.
தொடர்ந்து, ஜாவியா அரபிக் கல்லூரி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வருமான எஸ்.கே.எம். காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஏ.எச். முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் ஆகியவற்றின் நிறுவனர்- தலைவர் டீ.எம்.என். ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்டோர் மார்க்க உரையாற்றினர். மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்கா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளாக  கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.

0 comments

Leave a Reply