ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளை வழிப்பறி செய்தவர்கள் கைதுதிருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தரிடம் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி, டூவிநேசபுரம், கெட்டிக்காரன்விளையைச் சேர்ந்த மந்திரம் மகன் குமார் (28), இவர் திங்கள்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, இருசக்கர வாகனத்தில் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, பரமன்குறிச்சி வழியாக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்து, மிரட்டிய 3 பேர் இருசக்கர வாகனத்தை, அவரிடமிருந்து பறித்து சென்றனர்.
இதுகுறித்து குமார் திருச்செந்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பரமன்குறிச்சி பகுதியில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த 2 இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.
சோதனையில், சீர்காட்சி பால்துரை மகன் மோகன் (21), கன்னியாகுமரி, தெற்குமெய்யூர் ராஜகோபால் மகன் அருள்ஜீவி (24), சுரண்டை, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார் (19) ஆகியோர் என்பதும், விசாரணையில் அவர்கள் தான் குமாரின் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

0 comments

Leave a Reply