ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஸ்ரீவைகுண்டம் » ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தியாகிகளுக்கு நினைவுத்தூண்

Image result for ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம்


ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு வட்டாரம் மற்றும் நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் நகரத் தலைவர் சேதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் பட்சிராஜன் வரவேற்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன் பேசினார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் நினைவுத்தூண் அமைக்கவேண்டும்;
திருச்செந்தூர்-திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் வந்துசெல்லவேண்டும்; மழைக்காலத்துக்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அனைத்து பாசனக் குளங்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருங்குளம் வட்டாரத் தலைவர் கலீல்ரகுமான் நன்றி கூறினார்.
மாவட்ட பொருளாளர் நடராஜன், பூவெழில், ஐஎன்டியூசி சந்திரன், முருகன், மதிசேகரன், புகாரி, வட்டாரத் தலைவர்கள் கருங்குளம் ஆறுமுகம், ஆழ்வார்திருநகரி சாரதி, பெருங்குளம் நகரத் தலைவர் மதிபாலன், ஜெபமாலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply