ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் சப்கலெக்டரின் ஊழியர் விரோத போக்கைக் கண்டித்து வருவாய்துறை ஊழியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

 
தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருப்பவர் கோபாலசுந்தரராஜ், இவர் வருவாய்துறை 
ஊழியர்களுக்கு விளக்க குறிப்பாணை வழங்கியுள்ளார். இதனை கண்டித்து வருவாய்துறை ஊழியர்கள் வெளி நடப்பு போராட்டம் நடத்தினர். கலெக்டர் ரவிக்குமார் அழைத்துப்பேசி விளக்க குறிப்பாணை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

இந் நிலையில்தூத்துக்குடி தாசில்தார் சங்கரநாராயணனுக்கு கூடுதலாக மேலும் ஒரு விளக்க குறிப்பாணை வழங்கப்பட்டது. ஊழியர்களிடம் பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படும் சப்கலெக்டர் கோபாலசுந்தராஜை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நேற்று வருவாய் துறை ஊழியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி வருவாய் கோட்டங்களில் 530 பணியாளர்கள் உள்ளனர். 
    இதில் 468 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். மற்றவர்கள் மாற்றுப்பணியில் உள்ளனர். இதில் 333 பேர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். 
கோட்ட வருவாய்த்துறை அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் பணியாளர்கள் 
இல்லாததால், பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் 
சென்றனர். கோவில்பட்டியில் பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்கள் ஆத்திரத்துடன் அலுவலகத்தை மூடி விட்டு சென்றனர். இன்று பனிமய மாதா திருவிழா தொடர்ந்து வெள்ளி,சனி,ஞாயிறு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால்,பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

0 comments

Leave a Reply