ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகரில்தீ விபத்து

Image result for சென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகரில் ஏற்பட்ட தீ விபத்தில்
சென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகரில் ஏற்பட்ட தீ விபத்தில், 82 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.
இங்குள்ள பழண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜின் வீட்டின் மொட்டை மாடியில், வட மாநிலத் தொழிலாளர்கள் 20 பேர் தங்கியுள்ளனர்.
அடையாறு, பெசன்ட் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்யும் இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு வந்து, சமையல் எரிவாயு அடுப்பில் சமைத்து, சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிருந்து திடீரென பரவிய தீ அறை முழுவதும் எரியத் தொடங்கியது. மேலும், தீப்பிழம்புகள் கீழே விழுந்ததால், குடிசைகளிலும் பரவியது. கடற்கரையில் இருந்து வீசிய காற்றின் வேகம் அதிகரித்ததால், தீயும் வேகமாகப் பரவியது.
தகவலின்பேரில் கிண்டி, திருவான்மியூர், தேனாம்பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எரிந்த குடிசை வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு உருளைகளில் இருந்த வாயு வெளியேறியதால், தீயை அணைப்பதில் தாமதமும், மேலும் பல வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதனால், 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர், சிரமத்துக்கு இடையே தீயை வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சுமார் 82 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. அதில் இருந்த பணம், தங்க, வெள்ளி நகைகள், மின்சாதனப் பொருள்கள், 13 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை எரிந்து கருகின. இதனால், அங்கு வசித்தவர்கள் மாற்றுத் துணிக் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் சாஸ்திரி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

0 comments

Leave a Reply