ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » செஸ் போட்டி இரண்டு கல்லூரிகள் முதலிடம்

Image result for செஸ் போட்டி


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும், பெண்கள் பிரிவில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி அணியும் முதலிடத்தை பிடித்தன.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 22 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
5 சுற்றுகள் நடைபெற்ற ஆண்கள் பிரிவில், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடத்தையும், தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இதேபோல, 5 சுற்றுகள் நடைபெற்ற பெண்கள் பிரிவில், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும், நாகர்கோவில் கிறிஸ்துவ பெண்கள் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரி மாணவிகள் முன்றாமிடத்தையும் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜன் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கேடயத்தை வழங்கிப் பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஆக.5) பல்கலைக்கழக அணிகளுக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நடைபெறுகிறது.

0 comments

Leave a Reply