ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

Image result for கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு


தூத்துக்குடியில் கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிளை சனிக்கிழமை இரவு தீ வைத்து எரித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (19). இவர்,  பாளையங்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். கருப்பசாமி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பசாமியின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்து கருப்பசாமி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply